Puma Facts in Tamil | Top 10
பூமா பற்றிய சுவாரசியமான தகவல்கள்
1. கின்னஸ் ரெக்கார்டு
பூமா அதிக பெயர்களை கொண்டதால் கின்னஸ் ரெக்கார்டு செய்துள்ளது. கிட்டத்தட்ட பூமாவிற்கு 80 வகையான பெயர்கள் உள்ளன. உலகிலேயே அதிக அளவிலான பெயர்களைக் கொண்டது பூமா ஆகும்.
2. பூமா வட்டமான தலையும், நேரான காதுகளும் இருக்கும்.
பூமாவின் வயிற்றுப்பகுதி மிகவும் லேசாக இருக்கும்.
பூமாவின் முன்னங்கால்கள் பின்னங்கால்களை விட பெரியதாக இருக்கும் .இது இரைகளை பிடிக்க ஏதுவாக இருக்கும்.
பூமாவானது கிட்டத்தட்ட 15 அடி வரை பாயக்கூடியது.
3. பூமாவானது விடியற்காலையிலும் சாயங்காலமும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
பூமா இரவில் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் வரை நடந்து சென்று இறையை தேடும்.
4. பூமா தான் பிடித்த உணவுகளின் பிணத்தை மறைத்து வைத்து சேமிக்கும். பிணங்களை இலைகளைக் கொண்டு மறைத்து வைக்கும். பகல் பொழுதில் எப்பொழுதும் அந்த பிணத்தின் அருகிலேயே பூமா இருக்கும். இரவில் அதன் அருகிலேயே படுத்து உறங்கும்.
5. பூமாவானது அதிகப்படியான மிருகங்களை கொல்லகூடியது. அந்தப் பட்டியலை இப்போது பார்க்கலாம்: சிறிய முயல்கள் ,முள்ளம்பன்றி, ரக்கூன்கள், இளம் கன்றுகள் , ஆடுகள் , கோழிகள் , அணில்கள் மற்றும் மற்ற பூமாகளை கொன்று சாப்பிடும்.
6. பூமாவை அதிக அளவில் கொல்லும் விலங்குகள் ஓநாய்களும் கரடிகளும் ஆகும். இருந்தபோதிலும் அதிகபடியான பூமாகள் மனிதர்கள் வேட்டை ஆடுவதால் இறக்கின்றன. அதுமட்டுமில்லாமல் வாகனங்களில் சிக்கி இறக்கின்றன.
7. பூமாவானது தான் பிடிக்காத இறையை எப்போதும் உண்ணாது. அப்படி பிற விலங்குகள் கொன்ற உணவை சாப்பிடுவது மிகவும் அரிதாகவே நடக்கும்.
8. பூமாவால் உறும இயலாது. இருந்தாலும் இதனால் விசில் போன்ற சத்தத்தை எழுப்ப முடியும். அதேபோல் அலறல் சத்தம், கீறும் சத்தம் போன்ற வித்தியாசமான ஒலிகளை இவற்றால் எழுப்ப இயலும்.
9. குட்டி பூமாகளை நாம் "கப்" என்று கூறுவோம். தாய் பூமாகள் ஒன்று முதல் ஆறு குட்டிகள் வரை போடும்.
குட்டிகள் பிறக்கும் பொழுது அவற்றின் உடம்பில் புள்ளிகள் இருக்கும். கண்கள் நீல நிறமாக இருக்கும். வால் பகுதியில் வளையங்கள் இருக்கும்.
இந்த புள்ளிகள் வளர வளர காணாமல் போய்விடும்.
10.பூமாவின் கால்களில் ஐந்து மடக்கக்கூடிய நகங்கள் இருக்கும் அதேபோல் பின்னங்கால்களிலும் இருக்கும்.
பூமாவிற்கு கட்டுமஸ்தான கழுத்துப்பகுதி இருக்கும். அவற்றின் தாடை மிகவும் வலிமையாக இருக்கும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment