Jupiter Facts in tamil | Top 10
வியாழன் கிரகம் பற்றிய 10 தகவல்கள்
1. வியாழன் கிரகத்தில் வைர மழை பொழியும்.காரணம் இங்கு ஏற்படும் மின்னல்கள் மீத்தேனை கடினமான கார்பனாக மாற்றும். இந்த கார்பன்கள் மீண்டும் கிராபைட் என்றும் வைரமாக மாறும்.
2. வியாழன் மிகவும் பெரியது. மற்ற கிரகங்களை ஒப்பிடும்போது வியாழன் அளவில் மிகவும் பெரியதாக உள்ளது.
இப்போது இருப்பதை விட இன்னும் 80 மடங்கு பெரியதாக இருந்தால் வியாழன் நட்சத்திரத்தைப் போன்று பெரியதாக இருந்திருக்கும்.
3. வியாழனில் நாம் தரையிறங்க முடியாது. காரணம் வியாழனில் தரைப்பகுதி இல்லை. பூமியில் நடுப்பகுதியில் எப்படி நெருப்புக் குழம்பு உள்ளதோ அதேபோல் வியாழனின் நடுப்பகுதியில் காற்றுகள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கே தரை இறங்க முடியாது.
4. வியாழனிற்கு இதுவரை ஒரே ஒரு விண்கலம் மட்டுமே சென்றுள்ளது. இந்த விண்கலத்திற்கு கிட்டத்தட்ட 640 நாட்கள் தேவைப்பட்டது .
இந்த விண்கலம் வியாழனை தாண்டி சென்று புகைப்படம் எடுத்தது. அதன் பிறகு 11 வருடங்கள் பயணம் செய்து இந்த விண்கலம் தொடர்பில் இருந்து நீங்கிவிட்டது.
5. வியாழனில் இருந்து வெளிவரும் ரேடியோ அலை வரிசையினை பூமியிலிருந்து கூட நம்மால் பெற முடியும்.
6. வியாழனின் காந்தபுலமானது பூமியை விட 20,000 மடங்கு அதிகமானது .எனவே வியாழன் அருகில் செல்லும் அனைத்து பொருட்களும் உள்ளே இழுத்துக் கொள்ளப்படும்
7. வியாழன் மிகவும் வேகமாக சுற்ற கூடிய கிரகம். வியாழன் தன்னைத்தானே சுற்றிவர 10 மணி நேரம் மட்டுமே ஆகும். பூமிக்கோ 24 மணி நேரம் தேவைப்படும்.
8. வியாழனிற்கு நிறைய நிலவுகள் உள்ளன.அதில் "ஜென்மேட்" என்ற நிலவில் கடல் உறைந்த நிலையில் உள்ளது.எனவே இந்த நிலவில் உயிரினங்கள் வாழ வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
9. வியாழனின் ஜென்மேட் என்ற நிலவானது மெர்குரி கிரகத்தை விட மிகவும் பெரியது.
10. வியாழன் சூரியனைப் போல எரிவதற்கு தேவையான அனைத்து எரிபொருளும் அங்கு உள்ளது. எனினும் சூரியனில் ஏற்படும் நியூகிளியர் ரியாக்சன் போதுமான அளவு அங்கு இல்லை. இல்லையேல் நமக்கு இரண்டு சூரியன்கள் இருந்திருக்கும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment