Friday, March 19, 2021

பருந்து பற்றிய 10 தகவல்கள் Hawks Facts in tamil

பருந்து பற்றிய 10 தகவல்கள் 
Hawks Facts in tamil


1. பெரிய மற்றும் சிறிய பருந்து : உலகின் மிகப்பெரிய பருந்து இனம் "Ferrogenous" பருந்து.
இதன் ரெக்கைகள் 152 சென்டிமீட்டர் கிட்டத்தட்ட 2.5 கிலோ எடை கொண்டது.
உலகின் மிகசிறிய பருந்து "American kestral"
இதன் இறக்கையின் அளவு 60 சென்டிமீட்டர் மற்றும் உடல் எடை 125 கிராம் மட்டுமே.

2. பருந்துகளின் கண் பார்வை மிகவும் அபாரமானது. கிட்டத்தட்ட மனிதர்களை விட 8 மடங்கு அதனால் தெளிவாக பார்க்க முடியும்.
பருந்துகளால் 100 அடி தொலைவில் இருக்கும் சிறிய உயிரினத்தை கூட தெளிவாக பார்க்க முடியும்.

3. பருந்துகள் காற்றில் வித்தை (Aerobatics)  செய்யும்.எடுத்துக்காட்டாக தலைகீழாக பறக்கும், குட்டிகரணம் அடிக்கும். இதுபோல தொடர்ச்சியாக 10 நிமிடங்களுக்கு செய்யமுடியும். பெண் இணையை கவர்வதற்காக காற்றில் சாகசங்கள் செய்கின்றன.

4. பருந்துகளில் பெரிய வகையானது ஒன்றிலிருந்து இரண்டு வரை முட்டைகள் இடும். இவை வளர இரண்டரை மாதங்கள் ஆகும். இதுவே சிறிய பருந்துகள் கிட்டத்தட்ட 3 முதல் 4 முட்டைகள் வரை இடும். இவை முழுமையாக வளர ஒரு மாதம் போதுமானது.

5. பருந்துகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடன் வாழக் கூடியது. இந்த ஜோடியானது மிகவும் அக்கறையுடன் இருக்கும். ஒரு வேளை ஜோடியில் ஏதேனும் ஒன்று இறந்து விட்டால் மட்டுமே வேறு ஒரு துணையை தேடி செல்லும்.

6. பருந்துகளின் காதுகள் மிகவும் துல்லியமாக கேட்ககூடியது. தரையில் ஒரு எலி எழுப்பும் சத்தம் கூட பறக்கும் பருந்துக்கு தெளிவாக கேட்கும்.ஆனால் இவற்றிற்கு நுகரும் திறன் மிகவும் மோசம்.

7. பருந்துகளின் வேகம் : பருந்துகள் மிகவும் வேகமான பறவைகள். இவற்றால் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க முடியும். அதிலும் இந்த வேகமானது வேட்டையாடும் நேரத்தில் அதிகரிக்கும். பருந்துகளால் வானத்திலிருந்து செங்குத்தாக தரையை நோக்கி சீரிப்பாய்ந்து வரமுடியும்.இது நிகழும் போது வேகமானது இரட்டிப்பு ஆகும்.

8. பருந்துகளுக்கு மிகவும் பிடித்த உணவுகள் எலிகள், முயல்கள்,  தவளைகள், ஆமைகள், சிறிய வகையான பறவைகள் மற்றும் சில வகை பூச்சிகள்.
இவை சிறிய வகையிலான பாம்புகளையும் விரும்பி சாப்பிடும். ஆனால் தன் உடலை விட பெரியதாக இருக்கும் உயிரினங்களை இவை தாக்குவது இல்லை.

9. பருந்துகளின் நடனம் : பருந்துகள் ஜோடியாக வானத்தில் நடனமாட கூடியது. இந்த நடனத்தின் போது பருந்துகள் ஜோடியாக உயரத்திற்கு பறந்து செல்லும். 
பிறகு ஒன்றை ஒன்று நோக்கி பாய்ந்து வரும்.
அதன் பிறகு இரண்டும் தனது கால் நகங்களை ஒன்றாக கோர்த்து கொள்ளும்.
அதன்பின் வானில் இருந்து கீழ் நோக்கி இரண்டும் மிதந்தபடியே வரும். 
இவற்றை இன சேர்க்கையின் போது இவை செய்யும்.

10. பருந்துகள் கிட்டத்தட்ட 15 முதல் 20 ஆண்டுகள் வரை உயிருடன் வாழும்.இதிலும் குறிப்பாக சில வகைகள் 30 வருடங்கள் வரை வாழக்கூடியது. ஆனால் மனிதர்களின் செயல்களால் பருந்துகள் இத்தகைய ஆயுட்காலத்தை பெறுவது இல்லை. 

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 
நன்றி.🙏



No comments:

Post a Comment