Saturday, March 13, 2021

நீல திமிங்கிலம் பற்றிய தகவல்கள் Blue Whale facts in tamil | Tamil Facts Top 10

நீல திமிங்கிலம் பற்றிய தகவல்கள் 
Blue Whale facts in tamil



1. நீலத் திமிங்கிலங்கள் அருகில் கப்பல்கள் செல்வதால் ஆபத்தா?
பெரிய படகுகளால் நீலத்திமிங்கலம்களுக்குதான் பிரச்சனை ஏற்படுகிறது. கடலில் இறந்து கரை ஒதுங்கும் நீலத் திமிங்கலங்களில் படகுகளால் இடித்து காயம் ஏற்பட்டு இறந்தவைதான் அதிகம்.இவற்றால் படகுகளை தவிர்க்க முடியாது. காரணம் சரக்கு கப்பல்களை விட நீலத் திமிங்கிலங்கள் மெதுவானவை.

2. நீலத் திமிங்கிலங்களால் மனிதர்களுக்கு ஆபத்தா?
நீலத் திமிங்கலங்களின் தொண்டைப் பகுதி மிகவும் சிறியது.அதனால் ஒரு கூடைப்பந்து அளவில் உள்ள உணவை கூட விழுங்க முடியாது. எனவே இவற்றால் மனிதர்களுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படுவது இல்லை.

3. நீலத் திமிங்கிலங்கள் பாட்டுப் பாடும்.அவை தனது குட்டிகளுடன் இருக்கும் பொழுதும், இனச்சேர்க்கையின் போதும் பாட்டு பாடும். அதிகபட்சமாக ஒரு நீலத்திமிங்கலம் 6 நிமிடங்கள் வரை பாடி உள்ளது. மனிதனை தவிர பாட்டு பாடகூடிய ஒரே உயிரினம் இவைதான்.

4. நீலத் திமிங்கிலங்கள் நீந்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இவை தூங்கும்போது நீந்துவது இல்லை. எனவே அதன் எடை காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக கடலின் தரைப்பகுதிக்கு மூழ்கிக் கொண்டே செல்லும். தரைப் பகுதியை தொட்ட உடன் விழித்துக் கொண்டு மீண்டும் நீந்தி மேலே வரும்.

5. நீலத் திமிங்கிலத்தின் உடலில் அதிகப்படியான கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. எனவே இவற்றால் வருடத்திற்கு 8 மாதங்கள் வரை எந்த ஒரு உணவும் சாப்பிடாமல் உயிர் வாழ முடியும். அதேபோல் உணவு அதிகமாக கிடைக்கும் வேலையில் இவை அதிக அளவில் சாப்பிடும்.

6. உலகின் மிகவும் சத்தமான உயிரினம் நீலத்திமிங்கலம்தான். இவற்றால் கிட்டத்தட்ட 188 டெசிபல் வரை சத்தம் எழுப்ப முடியும். இது ஒரு போர் விமானத்தின் சத்தத்திற்கு ஈடானது.

7. பொதுவாகவே நீலத் திமிங்கிலங்கள் தண்ணீர் குடிப்பது இல்லை. காரணம் இவற்றின் உடம்பிலுள்ள கொழுப்புகள் மூலம் உணவில் இருக்கும் தண்ணீரை இவை பயன்படுத்திக் கொள்ளும்.இந்த கொழுப்பின் காரணமாக நீலத் திமிங்கலத்தின் பாலில் 50 சதவிகிதம் புரதம் உள்ளது.எனவே இவை மனிதர்கள் பயன்படுத்தும் பற்பசை போன்று கெட்டியாக இருக்கும்.

8. அனைத்து மீன் இனங்களும் இடது வலது என வாலினை ஆட்டி நீந்தும்.ஆனால் நீலத்திமிங்கலமாே தனது வாலினை மேல் கீழாக ஆட்டி நீந்தும்.
அதேபோல் உலகில் நீண்ட தூரம் இடம் பெறும் உயிரினம் இவைதான். இவை குளிரான கடல் பகுதியிலிருந்து வெப்பமான கடல் பகுதிக்கு நீந்தி செல்லும்.

9. நீலத் திமிங்கிலங்கள் மனிதர்களைப் போல காற்றை சுவாசிக்க வேண்டும். எனவே ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் இவை காற்றினை சுவாசிக்க கடலின் மேல்புறத்திற்கு வரும். ஆனால் இவற்றால் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வரை காற்றினை சுவாசிக்காமல் ஆழ்ந்த கடலில் இருக்க முடியும்

10. 1990'களில் நீலத்திமிங்கிலகளின் எண்ணிக்கை பல லட்சமாக இருந்தன. ஆனால் தற்பொழுது 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மட்டுமே உலகில் உள்ளன.
எனவே இன்னும் சில வருடங்களில் நாம் நீலத் திமிங்கிலத்தினை அருங்காட்சியகத்தில் மbட்டுமே பார்க்க நேரிடும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 
நன்றி.🙏


No comments:

Post a Comment