Saturday, February 20, 2021

WeightLoss Tips In Tamil | உடல் எடையை குறைப்பதற்கு 10 வழிகள் | Tamil Facts Top 10

WeightLoss Tips In Tamil | Top 10

உடல் எடையை குறைப்பதற்கு 10 வழிகள் 


1. தண்ணீர் 
சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிட்ட பின்பும் அரை லிட்டர் தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்கும். இதன் மூலம் நாம் அதிக உணவை சாப்பிடாமல் தவிர்த்து விடுவோம்.

2. முட்டை 
காலை உணவாக முட்டை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க எளிமையான வழியாகும். 
முட்டையில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. அதே போல் புரதம் செரிக்க நீண்ட நேரம் ஆகும். எனவே நாம் பசி இல்லாமல் நீண்ட நேரத்திற்கு செயல்படலாம்.

3. காபி 
காபியில் காஃபின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது உடலுக்கு தேவையான உற்சாகத்தை கொடுக்கும். அதே போல் உடலின் செயல் நிலையை அதிகரிக்கும்.
ஆனால் காபியை பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் தண்ணீரில் தான் சாப்பிட வேண்டும்.

4. கிரீன் டீ 
கிரீன் டீயில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.
ஒரு நாளைக்கு 4 கப் வரை க்ரீன் டீ குடிப்பது வயிற்றுப்பகுதியில் கொழுப்பினை குறைத்து உடல் எடையை குறைக்க செய்யும் .

5. சுகர்(சீனி)
சீனி சாப்பிடக்கூடாது.சீனி சாப்பிடாமல் ஒரு மாதம் இருந்தால் உங்களது உடலில் நீங்கள் எளிதாக மாற்றங்களை காண முடியும். சீனி என்பது அனைத்து விதமான சர்க்கரையால் செய்த பண்டங்களை குறிக்கும்.

6. தட்டின் அளவு
நாம் சாப்பிடும் தட்டுக்களின் அளவை குறைப்பது நாம் அதிகப்படியான உணவை சாப்பிடாமல் தடுக்கும்.
சிறிய தட்டில் எவ்வளவு எடுக்க முடியுமோ அவ்வளவு உணவை மட்டுமே எடுத்து சாப்பிட வேண்டும் என தீர்மானம் கொள்ளுங்கள் .

7. நொறுக்குத் தீனி 
நொறுக்குத்தீனி சாப்பிடாமல் இருப்பதை விட உங்கள் அருகில் அது இல்லாமல் இருப்பது நல்லது. நொறுக்குத்தீனியானது நம்மை எளிதில் கவர்ந்து விடும்.
எனவே உங்கள் அருகில் எந்த ஒரு நொறுக்குதீனியும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். வேண்டுமென்றால் ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக வேர்கடலை வாழைப்பழங்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

8. காரமான உணவு 
காரமான உணவு உடலின் செயல்திறனை அதிகரிக்கும் இதன் மூலம் அதிகப்படியான கலோரிகள் உடலில் இருந்து எரியும். எனவே காரமான உணவை சாப்பிடுவதன் மூலம் நாம் உடல் எடையை குறைக்க இயலும்.

9. காய்கறிகள் மற்றும் பழங்கள் நாளொன்றுக்கு ஒரு வேளையாவது சாதம் சாப்பிடாமல் முழுக்க முழுக்க காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிட்டால் எளிதில் உடல் எடையை குறைக்கலாம்.

10. மென்று சாப்பிடுதல்
உணவை மிகவும் பொறுமையாக நிதானமாக நீண்ட நேரத்திற்கு மென்று சாப்பிட்டோம் என்றால் அது சுலபமாக செரிமானம் ஆகும் எனவே சுலபமாக உடல் எடை குறையும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 
நன்றி.🙏

No comments:

Post a Comment