Saturday, February 20, 2021

Bad habits to avoid after eating | சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத 10 பழக்கங்கள் | Tamil Facts Top 10

Bad habits to avoid after eating | Top 10

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத 10 பழக்கங்கள் 

1. தூக்கம் 
சாப்பிட்ட பின்பு தூங்கினால் உடலிலுள்ள உணவானது எதிரான திசையில் பயணம் செய்யும். இதனால் அஜீரண கோளாறுகள் ஏற்படும். தொண்டை எரிச்சல் ஏற்படும்.

2. குளித்தல் 
சாப்பிட்டவுடன் குளித்தால் இரத்தமானது வேகமாக கால்களுக்கும் , கைகளுக்கும் செல்லும் .இதனால் செரிமானத்திற்கு தேவையான சக்திகளை இழக்க நேரிடும். எனவே சாப்பிட்ட உடன் குளிக்க கூடாது .

3. பழம் சாப்பிடுதல்
பழங்கள் எளிதாக உடம்பில் ஜீரணிக்க கூடியவை. இவற்றை உணவுகளோடு சேர்த்து சாப்பிடும்போது இவை நீண்ட நேரம் நமது வயிற்றில் இருக்கின்றன.
எனவே வயிற்றில் இவை செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

 4. படித்தல் 
சாப்பிட்ட உடன் படிக்ககூடாது. சாப்பிட்ட பிறகு நமது செரிமானத்திற்கு அதிக சக்தி ஆனது செலவிடப்படும்.
எனவே நம்மால் படிப்பில் கவனம் செலுத்த இயலாது.

5. புகைப்பிடித்தல் 
சாப்பிட்ட உடன் புகை பிடிப்பது கிட்டதட்ட 10 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமான விளைவுகளை நமது உடலில் ஏற்படுத்தும்.

6. நடைபயணம் 
சாப்பிட்ட பிறகு நடந்தோம் என்றால் நமது உடலில் சமநிலை பாதிக்கப்படும்.
எனவே செரிமானம் தடைபடும். அதனால் சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்துதான் நாம் நடை பயணம் செல்ல வேண்டும்.

7. உடற்பயிற்சி 
சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்தால் உணவானது வயிற்றில் சமநிலையை அடையும். இதன் மூலம் நமது உடலில் உள்ள பாகங்கள் செய்வதறியாது திகைக்கும்.இது உடலில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

8. வயிற்றுப் பட்டை (பெல்ட்) கழற்றுவது
சாப்பிட்டவுடன் நமது உடையையோ அல்லது வயிற்றுப் பட்டயையோ  கழட்டகூடாது. இதனால் திடீரென்று வயிற்றில் வெற்றிடம் ஏற்படும்.
 எனவே உணவானது வேகமாக பயணிக்க தொடங்கும்.
இதனால் அஜீரண கோளாறுகள் ஏற்படும்.

 9. குளிர்ந்த நீர் பருகுதல் 
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரை நாம் பருககூடாது.எனெனில் குளிர்ந்த நீரை செரிமானம் செய்ய நமக்கு அதிக சக்தி தேவைப்படும். இந்த சக்தியானது இதில் செலவிடுவதால் நமக்கு உணவு செரிப்பதில் பிரச்சனை ஏற்படும். எனவே வெதுவெதுப்பான தண்ணீரை சாப்பிட்ட அரை மணி நேரம் பிறகு நாம் பருகலாம்.

10. தேநீர் அருந்துதல் 
சாப்பிட்டவுடன் நாம் தேனீர் அருந்தகூடாது.ஏனெனில் தேனிரானது புரதச்சத்தினை நாம் உணவில் இருந்து பெறுவதை தடுத்துவிடும். அதேபோல் நமது உடலில் இரும்பு பற்றாக்குறையையும் ஏற்ப்படுத்தும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 
நன்றி.🙏



No comments:

Post a Comment