Black mamba facts in tamil | Top 10
கருப்பு மாம்பா பாம்பு பற்றிய 10 தகவல்கள்.
1. கருப்பு மாம்பா
இந்தப் பாம்புகளின் பெயர் தான் கருப்பு மாம்பா தவிர இந்த பாம்புகள் கருப்பு நிறம் அல்ல. இந்தப் பாம்புகள் காக்கி மற்றும் சாம்பல் நிறத்தில் தான் காணப்படுகிறது.
ஆனால் இதன் வாய் பகுதியானது முழுவதுமாக கருமையாக இருக்கும்.
இதனால்தான் இந்தப் பாம்பு கருப்பு மாம்பா என அழைக்கப்படுகிறது.
2. இந்தக் கருப்பு மாம்பா மற்ற பாம்புகளைப் போல் கடித்துவிட்டு தப்பி ஓடகூடியது அல்ல.
இவை எதிர்த்துத் தாக்கும் திறன் கொண்டது. கருப்பு மாம்பா கடித்தால் மீண்டும் மீண்டும் கடித்துக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு முறையும் அதிக அளவிலான விஷத்தினை நமது உடலில் செலுத்திக் கொண்டே இருக்கும்.
3. இந்தப் பாம்பு மிகவும் கொடுமையானதுதான். இருந்தபோதிலும் இந்த பாம்பினை கொள்ளக்கூடிய உயிரினங்கள் உள்ளன.
அவை காக்கி நிற கழுகுகள், மார்ஷியல் கழுகுகள், கீரிப்பிள்ளை மற்றும் "கேப் பையில்" என்ற பாம்பினம்.
இவை கருப்பு மாம்பாவினை விரும்பி சாப்பிடும்.
4. பூமியில் உள்ள மிக வேகமான பாம்புகளில் கருப்பு மாம்பாவும் ஒன்று.
இந்த வகை பாம்புகள் மணிக்கு 21 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.
இந்த வேகத்தில் மனிதனால் கூட தப்பிக்க முடியாது.
5. கருப்பு மாம்பா பாம்புகள் அதிகமாக வெட்கப்படும் தன்மை உடையது.
இந்த வகை பாம்புகளுக்கு உள்ளுணர்வு நன்றாக வேலை செய்யும்.
நாம் வருவதை எளிதாக கண்டுபிடித்து விடும்.
6. பிளாக் மாம்பா பாம்புகள் படம் எடுக்கும்பொழுது கிட்டத்தட்ட 3 அடிவரை எழுந்து நிற்கக் கூடியது. இந்தவகை பாம்புகளால் மனிதனின் நெஞ்சுப்பகுதியில்கூட சுலபமாக படிக்க இயலும்.
7. இந்தக் கருப்பு மாம்பா பாம்பிற்கு மிகவும் பிடித்த உணவு பறவைகள் மற்றும் மிகவும் சிறிய அளவிலான பாலூட்டிகள். இவற்றைத் தவிர வேறு எந்த ஒரு பெரிய மிருகத்தையும் கருப்பு மாம்பா உணவாக்கிகொள்வது இல்லை.
8. கருப்பு மாம்பாவின் விஷம் மிகவும் கொடுமையானது.
ஒரு வளர்ந்த மனிதனை கொள்வதற்கு இரண்டு சொட்டு விஷம் போதும்.
அதேபோல் விஷம் செலுத்திய 20 நிமிடங்களுக்குள் ஒரு மனிதன் இறந்துவிடுவான்.
9. விஷமுறிவு மருந்து
கருப்பு மாம்பா ஆப்பிரிக்க பகுதிகளில் தான் அதிகம் காணப்படுகின்றன. ஆனால் இந்தப் பகுதியில் விஷமுறிவு மருந்து பிரபலமாக இல்லாத காரணத்தினால் வருடத்திற்கு 20,000 மக்கள் இந்த பாம்பினால் இறக்கிறார்கள்.
10. கருப்பு மாம்பாகள் குறைந்த பட்சமாக எட்டு அடி வரை வளரக்கூடியது. அதிகபட்சமாக 14 அடி வரை வளரக்கூடியது.
இதன் மூலம் உலகின் மிகப்பெரிய பாம்பு வகைகளில் இரண்டு வகையாக உள்ளது.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment