Tuesday, February 23, 2021

Aeroplane facts in tamil விமானம் பற்றிய தகவல்கள் Tamil facts

Aeroplane facts in tamil | Top 10

விமானம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் 

1. விமானம் ஒரு இன்ஜின் வைத்துக்கொண்டு அருமையாக பறக்க முடியும். 
அதேபோல் அனைத்து இன்ஜின்களும் பழுதானால் கூட விமானத்தால் தரையிறங்க முடியும்.

2. விமானத்தில் ஆபத்து நேரங்களில் நமக்கு கிடைக்கும் ஆக்சிஜன் முகமூடி, கிட்டத்தட்ட 12 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே நமக்கு ஆக்சிஜன் கொடுக்கும் வண்ணம் தயாரித்திருபார்கள். இது விமானம் திடீரென வேகமாக உயரம் குறையும் பொழுது நமக்கு கிடைக்கும்.

3. அமெரிக்காவில் விமானத்தை நோக்கி விளையாட்டு பொருளான "லேசர் லைட்" அடிப்பது சட்டப்படி குற்றமாகும் இதற்கு சில வருடங்கள் ஜெயில் தண்டனை கிடைக்கலாம்.

4. இதுவரை நடந்த விமான விபத்துக்களில் எடுத்த கணக்கெடுப்பில் விமானத்தில் முதல் மற்றும் நடு பகுதியில் அமர்ந்திருந்த பயணிகளை விட விமானத்தின் கடைசியில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு உயிர் சேதாரம் மிகவும் குறைவு.

5. விமானத்தில் இருக்கும் இரண்டு பைலட்டுகளுக்கும் இரண்டு வித்தியாசமான உணவு கொடுக்கப்படுகிறது. 
காரணம் யாரேனும் ஒருவருக்கு உணவு உபாதை ஏற்பட்டால் மற்றொருவர் விமானத்தை இயக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் செயலில் உள்ளது.

6. விமானம் பறக்கும் நேரங்களில் மேகங்களில் மின்னல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதேபோல் மின்னல்கள் விமானத்தை அதிகமாக தாக்கும். ஆனால் விமானங்கள் இந்த மின்சாரத்தினை சமம் செய்யும் அளவிற்கு தயாரிக்கப்பட்டிருக்கும்.

7. விமானம் கிளம்பும் போதும், தரை இறங்கும் போதும் சிறிது நேரத்திற்கு முன்பாக விமானத்தில் உள்ள விளக்குகள் வெளிச்சம் குறைக்கப்படும். அப்பொழுதுதான் நமது கண்பார்வை அந்த இருட்டுக்கு ஏற்றார்போல் நம்மளை மாற்றி அமைத்துக்கொள்ளும். இல்லையென்றால் திடீரென ஏற்படும் கோளாறினால் வெளிச்சம் அணைக்கப்பட்டால் நமது கண்கள் அதற்கு ஏற்றார்போல் சரி செய்து கொள்ள நேரம் எடுக்கும்.

8. விமானம் பறந்து கொண்டிருக்கும் பொழுது நம்மால் அதன் கதவுகளை திறக்க இயலாது. இதற்கு காரணம் விமானத்தின் வடிவமைப்பு அல்ல. இதற்கு விமானத்தினுள் ஏற்படும் காற்று அழுத்தமே காரணம். ஒரு தனிமனிதனால் விமானத்தின் கதவுகளை திறக்க முடியாது. நான்கைந்து பேர் சேர்ந்தாலும் திறப்பது கடினமே.

9. விமானம் விபத்துக்குள்ளானால் அங்கே என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க உதவும் "பிளாக் பாக்ஸ்" ஆனது உண்மையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். அப்போதுதான் இது எங்கே விழுந்திருந்தாலும் சுலபமாக நமது கண்களுக்கு புலப்படும்.

10. விமானத்தினுள் இருக்கும் காற்றானது மிகவும் வறண்டு போய் இருக்கும். இதற்கு காரணம் உயரம் மற்றும் காற்றின் அழுத்தம் ஆகும்.
இதனால் பயணிகள் விமான பயணத்தின் பிறகு அதிகமாக தண்ணீர் குடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 
நன்றி.🙏

No comments:

Post a Comment