Sunday, February 21, 2021

Human body facts in tamil மனித உடல் பற்றிய தகவல்கள் Top 10 Facts

Human body facts in tamil | Top 10

மனித உடல் பற்றிய 10 தகவல்கள் 

1. நாம் சாப்பிடாமல் இருந்து இறப்பதைவிட தூங்காமல் இருந்தோம் என்றால் வேகமாக இறந்து விடுவோம்.

2. மனிதர்களாகிய நாம் காலையில் குள்ளமாகவும் இரவில் உயரமாகவும் இருப்போம். காரணம் காலையில் நாம் நிற்பதால் எலும்புகளில் அழுத்தம் இருக்கும். 
ஆனால் இரவில் நாம் படுப்பதால் எலும்புகளில் அழுத்தம் குறைவாக இருக்கும். 
எனவே நாம் இரவில் ஒரு சில சென்டி மீட்டர்கள் உயரமாக இருப்போம்.

3. நாம் முத்தம் கொடுப்பதால் நமது உடலில் கிருமிகள் பரவுகின்றன. 
ஆனால் இதை விட நாம் பிறருக்கு கை கொடுக்கும் பொழுது தான் அதிக அளவில் கிருமிகள் பரவுகின்றன.

4. மனிதனின் "டி என் ஏ"  சிம்பன்சி குரங்குகளிடம் 92% ஒற்றுப்போகிறது. 
ஆனால் "ஸ்லக்" என்னும் அட்டைப்பூச்சியுடன் 97% ஒற்றுப்போகிறது.

5. நம் உடலில் எங்கு அடிபட்டாலும் நமக்கு வலிக்கும். 
ஆனால் நமது மூளையில் அடிபட்டால் மட்டும் நமக்கு சிறிதுகூட வலிக்காது. 
காரணம் வலியை உணரச் செய்வது நமது மூளையின் வேலை ஆகும்.

6. நமது உடலில் உள்ள அனைத்து பாகங்களும் தன்னைத்தானே குணப்படுத்தும் ஆற்றல் உடையது. 
ஆனால் நமது பற்களுக்கு மட்டும் இது போல் குணமாகும் திறன் கிடையாது.

7. ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக அளவில் மோப்பம் பிடிக்கும் திறன் உள்ளது. 
அதே போல் ஆண்களைவிட பெண்களால் எண்களை சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும்.

8. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட கை ரேகைகள் உள்ளன. 
அதே போல் நமது நாக்கில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மையான ரேகை உள்ளது. 
இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மையான உடல் வாசனை உள்ளது.

9. உலகிலுள்ள உயிரினங்களில் மனிதனால் மட்டுமே உணர்ச்சி காரணமாக கண்ணீர்விட்டு அழ முடியும். 
மற்ற மிருகங்களால் வலியின் காரணமாக மட்டுமே கண்ணீர் விட்டு அழ முடியும்.

10. மனிதனின் தலையை வெட்டினால் வெட்டிய 16 நொடிகளுக்கு அவனால் அனைத்துப் புலன்களையும் பயன்படுத்த முடியும். பார்க்க முடியும், கேட்க முடியும், நுகர முடியும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 
நன்றி.🙏

No comments:

Post a Comment