Tuesday, February 23, 2021

Death facts in tamil | மரணம் பற்றிய தகவல்கள்

Death Facts in tamil | Top 10 Tamil Facts

மரணம் பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள் 

1. மனிதன் இறந்த பிறகு அவனுடைய கை நகங்களும் கால் நகங்களும் வளரும். ஆனால் உண்மையில் மனிதனின் தோல் சுருங்குவதால் நகங்கள் வளர்ந்தது போல் தோன்றும்.
நகங்கள் மனிதன் இறந்த பிறகு வளராது

2. நம் உடலைப் புதைத்த பிறகு மண் நமது உடலை அரிப்ப்பதற்கு முன்பே நமது வயிற்றினுள் இருக்கும் அமிலங்கள் நம்மை உள்ளிருந்து வெளிப்பக்கமாக அரிக்க ஆரம்பித்துவிடும்

3. நமது தலையை வெட்டிய பின்பும் நமது தலைக்கு 15 முதல் 20 நொடிகளுக்கு அனைத்து புலன்களும் செயலில் இருக்கும். நம் கண்களால் நாம் பார்க்கலாம், காதுகளால் கேட்கலாம், மூக்கால் நுகரலாம்.
அதன் பிறகே நமது மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாமல் செயலிழந்துவிடும்.

4. நமது உடலானது மண்ணில் இருப்பதைவிட தண்ணீரில் நான்கு மடங்கு வேகமாக மக்கிவிடும். காரணம் நீரோட்டம் மற்றும் தண்ணீரில் நிறைந்திருக்கும் கிருமிகள் ஆகும்.

5. மனிதர்கள் வயதாவதால் இறப்பது இல்லை. அதற்கு மாறாக வயதாகும் போது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் ஏதேனும் ஒரு நோய் தாக்கிதான் நாம் இறக்கிறோம். மற்றபடி வயது மரணத்திற்கு காரணம் அல்ல.

6. நாம் உயிருடன் இருக்கும் பொழுது தண்ணீரில் மூழ்கி விடுவோம்.
ஆனால் இறந்த பின்பு தண்ணீரில் மிதப்போம். காரணம் நாம் இறந்த பின்பு நமது உடலில் நிறைய காற்றுகள் உருவாகும். அதேபோல் தண்ணீரும் உடலினுள் சென்று விடும். இதனால் நாம் பலூன் போன்று ஆகி விடுவோம்.

7. மனிதன் இறந்த பின்பு அவனது உடலில் இருக்கும் பூச்சிகளை வைத்தும், புழுக்களை வைத்தும் அவன் இறந்து எத்தனை நாட்கள் ஆனது என்பதை ஆராய்ச்சியாளர்களால் கூற முடியும்.

8. நமது இமயமலையில் கிட்டத்தட்ட இருநூறு சடலங்கள் கைப்பற்றாமல் புதைந்த நிலையில் உள்ளன. இவர்கள் இமயமலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என சென்றவர்கள்.

9. மனிதன் இறந்த பின்பு அவனது அனைத்து தசைகளும் செயல் இழந்துவிடும். இதன் காரணமாகத்தான் இறந்த பின்பு கண்கள் திறந்த நிலையில் இருக்கும், அதே போல் தாடையும் திறந்தே இருக்கும்.

10. நம் உடலினை மக்கக்கூடிய பாக்டீரியாக்கள் நாம் உயிருடன் இருக்கும் பொழுதே நமது உடம்பில் இருக்கும். ஆனால் இவற்றால் நோய் எதிர்ப்பு சக்தியினை தாண்டி நமது உடலை எதுவும் செய்ய இயலாது. இறந்த பின்பே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவுடன் இவை நமது உடலை மக்க செய்யும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 
நன்றி.🙏

No comments:

Post a Comment