Animals which can kill a lion (Top 10)
சிங்கத்தை கொல்லக்கூடிய 10 விலங்குகள்
1. யானை
யானையானது சுலபமாக ஒரு காரை கவிழ்த்துப்போட்டுவிடும். யானையால் சிங்கத்தை எளிமையாக கொல்ல முடியும். ஆனால் அதற்கு சிங்கம் யானையின் துதிக்கையில் சிக்க வேண்டும்.
2. காண்டாமிருகம்
காண்டாமிருகத்தின் தோல் மிகவும் கடினமானது.
அவற்றின் கொம்புகள் மிகவும் கூர்மையாகவும் வலுவானதாகவும் இருக்கும். இவற்றால் சிங்கத்தை எளிமையாக கொல்ல முடியும்.
3. நீர்யானை
நீர்யானை மிகவும் ஆக்ரோஷமான மிருகம்.
இவை எப்பொழுதும் மற்ற விலங்குகளை தாக்குவதற்கு தயாராக இருக்கும். நீர்யானையின் மிகச்சிறந்த ஆயுதங்கள் அவற்றின் பற்கள். அதேபோல் அகண்ட வாய் பகுதி உள்ளதால் கடி வலிமை அதிகமாக இருக்கும்.
4. ஒட்டகச்சிவிங்கி
ஒட்டகச்சிவிங்கியின் ஆயுதம் அதன் வலிமையான கால்கள். ஒட்டகச்சிவிங்கி ஒரே முறை உதைத்தால் போதும் சிங்கத்தின் முகம் சிதைந்து விடும். ஆனால் இதற்கு சரியான நேரம் தேவை. இல்லையென்றால் சிங்கம் ஒட்டகச்சிவிங்கியை கொன்றுவிடும்.
5. நெருப்புக்கோழி
நெருப்புக்கோழியின் கால் மிகவும் வலிமையானது. அதில் கூர்மையான நகங்கள் இருக்கும். நெருப்புக்கோழி முட்டையினை பாதுகாக்க ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தும். இந்த நேரங்களில் சிங்கத்தால் நெருப்புக்கோழிகளிடம் ஈடு கொடுக்க முடியாது.
6. பனிக்கரடி
சிங்கங்களும் பனிகரடிகளும் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின்றன. எனினும் பனிகரடிகளால் சிங்கங்களை கொல்ல முடியும். காரணம் பனிக்கரடியின் உடல் எடை அதிகமாக இருக்கும். கால்களில் பலம் அதிகமாகவும், கூரிய நகங்களும் இருக்கும்.
7. புலி
சிங்கத்திற்கு இணையான மிருகம் புலியாகும். இவை இரண்டும் உடல் எடை முதல் அனைத்து விஷயங்களிலும் சமமாக இருக்கும். எனவே இந்த இரண்டு மிருகங்களும் மோதும் பொழுது வெற்றிபெறும் வாய்ப்பு இரண்டு பேருக்கும் 50% உண்டு.
8. முதலை
முதலை தண்ணீருக்கு ராஜாவாகும். சிங்கத்தால் தண்ணீரில் முதலையை எதிர்த்து போட்டியிட முடியாது. முதலையின் பற்களும் தாடைகளும் சிங்கத்திற்கு எமனாக அமைந்துவிடும்.
9. காட்டு எருமை
சிங்கத்திற்கு மிகவும் பிடித்த உணவு காட்டெருமை. ஒரு காட்டெருமையை கொன்றால் சிங்க கூட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு உணவு தேவை இல்லை. ஆனால் ஒரு சிங்கத்தால் தனியாக நின்று ஒரு காட்டெருமையை கொல்ல இயலாது. காட்டெருமையின் கொம்புகளும், அவற்றின் மிகப்பெரிய உடம்பும் சிங்கத்தால் ஈடு கொடுக்க முடியாது.
10. மனிதன்
சிங்கத்தை மட்டுமல்லாமல் அனைத்து மிருகங்களையும் கொல்லும் ஒரு உயிரினம் மனிதன். மனிதனால் பல உயிரினங்கள் அழிந்து விட்டன. அழியும் தருவாயில் பல விலங்குகள் சென்றுவிட்டன.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment