Eagle Facts in tamil | Top 10
கழுகு பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்
1. நாம் படங்களில் கேட்கும் கழுகின் குரலானது மிகவும் கம்பீரமாக இருக்கும். ஆனால் நிதர்சனத்தில் கழுகுகளின் குரலானது மிகவும் மோசமாகவே இருக்கும். ஆனால் "ரேட் டேய்ல்டு கழுகு" என்ற கழுகு மிகவும் கம்பீரமான குரல் உள்ளது.
2. நெதர்லாந்து நாட்டில் போலீஸ் பிரிவினர் கழுகுகளுக்கு ஆளில்லாத ட்ரோன் விமானங்களை கண்டுபிடித்து தாக்குவதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு கழுகுகளை மட்டும் கொண்ட போலீஸ் அமைப்பும் உள்ளது.
3. கழுகுகள் மிகவும் காதல் பாசம் கொண்டது. புறாக்களை போல் கழுகுகளும் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு துணைக்கு மட்டுமே ஜோடியாக இருக்கும்.
ஒரு வேளை அந்த ஜோடி ஆனது இறந்துவிட்டால் மட்டுமே அடுத்த இணையை தேடும்.
4. உலகில் அதிக அளவில் எடை தூக்ககூடிய பறவைகள் முதல் இடம் அருகே உள்ளது அதிலும் குறிப்பாக "மார்ஷியல் கழுகு" வகைகள் தன் உடலை விட 8 மடங்கு அதிகமான எடையை தூக்கிக் கொண்டு பறக்க கூடியது. இது மலை ஆடுகளை தூக்கி சென்று உள்ளது.
5. கழுகுகள் தாங்கள் இருக்கும் இடத்தினை வேறு யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது. பெரும்பாலான கழுகுகள் ஒரே இடத்தில் தான் மீண்டும் மீண்டும் முட்டையிட்டு அடைகாக்கும். ஆனால் பனி பிரதேசங்களில் மட்டும் கழுகுகள் அடிக்கடி இடம் பெயர்ந்து போவது போகும். ஆனால் பணிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் தன் கூட்டிற்கு வந்து விடும்.
6. முட்டையிட்ட பின் ஆண் பெண் கழுகுகளும் ஏதேனும் ஒன்று எந்நேரமும் தனது கூட்டின் மேல் பார்வையைச் செலுத்திக் கொண்டே இருக்கும். இரண்டு கழுகுகளும் தன் கூட்டினை விட்டு வேறு எங்கும் செல்வதில்லை.
7. கழுகுகளில் பொதுவாக பெண் கழுகுகள்தான் முட்டையை அடைகாக்கும். ஆண்கள் பெண்களுக்குத் தேவையான உணவினை தினமும் கொண்டு வந்து கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொள்ளும்.
8. கழுகுகள் பொதுவாக தங்கள் கூட்டினை மிகவும் பெரியதாக கட்டும் பழக்கம் உடையது.
இதில் "பால்டு கழுகு" கிட்டத்தட்ட எட்டு அடி வரை கூட கூடுகட்டும். சில நேரங்களில் கூடுகளின் எடை தாங்காமல் மரக்கிளைகளே உடைந்து விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
9. கழுகுகளில் மிகவும் அரிதான கழுகு வகை "செற்பெண்ட் ஈகிள்" ஆகும் இந்த கழுகுகள் அதிகமாக பாம்புகளையே விரும்பி சாப்பிடும்.
இது அழியும் தருவாயில் உள்ளது.
10. கழுகுகள் மிகவும் சந்தர்ப்பவாதி.
ஒரு விலங்கு தன் இறையை கொல்லும், அதுவரை கழுகுகள் காத்திருக்கும் உணவை கொன்ற பின்பே சுலபமாக திருட முடியும் என்றால் மட்டும் அந்த உணவினை தாக்கி அழித்துக் கொள்ளும் அதே போல் உணவு எங்கே கிடைத்தாலும் அதனை அபகரிக்க தயார் நிலையில் கழுகுகள் இருக்கும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment