Snow leopard facts in tamil | Top 10
பனிச்சிறுத்தை பற்றிய 10 தகவல்கள்
1. பனி சிறுத்தைகள் ஆசியாவின் மையப் பகுதியில் காணப்படுகின்றன.
முக்கியமாக இந்தியா, சீனா, நேபால் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.
இமயமலையில் இந்த பனிச்சிறுத்தைகள் காணப்படுகிறது.
2. பனிசிறுத்தையை "கோஸ்ட் ஆப் தி மவுண்டைன்" அதாவது "மலைகளின் பேய்" என்று அழைக்கின்றனர்.
காரணம் இந்தப் பனி சிறுத்தை எளிதாக யார் கண்ணிற்கும் தெரிவது இல்லை.
பல மாதங்கள் காத்திருந்தால் மட்டுமே பனிசிறுத்தையின் பதிவானது நமக்கு கிடைக்கும்.
3. பனிச்சிறுத்தை மிகவும் அரிதான விலங்கு பட்டியலில் சேர்ந்து விட்டது. உலகில் கிட்டத்தட்ட 4000 முதல் 6000 பனிசிறுத்தைகள் மட்டுமே இப்போது உயிரோடு இருக்கின்றன.
இந்த நிலைமை நீடித்தால் நாம் பனிச்சிறுத்தையை விலங்குகள் கண்காட்சியில் மட்டுமே பார்க்க முடியும்.
4. பனி சிறுத்தையால் உறுமல் செய்ய முடியாது, எனினும் இவற்றால் பூனையை போன்ற அனைத்து விதமான ஒலிகளையும் எழுப்ப முடியும்.
5. பனி சிறுத்தைக்கு மிகவும் பிடித்த உணவு மலை ஆடுகள். இதுமட்டுமல்லாமல் மனிதர்கள் வளர்க்கும் கால்நடைகளையும் அடிக்கடி பனி சிறுத்தைகள் உள்ளே நுழைந்து வேட்டையாடி எடுத்து சென்று விடும்.
6. பனி சிறுத்தைகள் வாழ்நாள் முழுவதும் தனியாகவே இருக்கும். இனப்பெருக்க காலங்களில் மட்டுமே ஜோடியோடு சேரும். பெண் சிறுத்தைகள் மட்டுமே குட்டிகளை பார்த்துக் கொள்ளும்.
7. பனி சிறுத்தையின் வால் மிகவும் பெரியதாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். இந்த வாலில் அதிகப்படியான கொழுப்பு சத்துக்கள் சேர்ந்து இருக்கும். உணவு பற்றாக்குறை ஏற்படும் நேரங்களில் பனி சிறுத்தை வால் பகுதியில் இருக்கும் கொழுப்புகளை பயன்படுத்திதான் உயிர் வாழ்கின்றன.
8. பனிச் சிறுத்தைகள் தனது வாலை தூங்குவதற்கும் பயன்படுத்துகின்றன. தூங்கும்பொழுது பனி சிறுத்தைகள் தங்களது வாலை கைகளால் இறுக்கி அணைத்து கட்டிப்பிடித்து தூங்கும். இதன் மூலம் பனி காலங்களில் கதகதப்பு தருவதற்கு வால் பயன்படுகிறது.
9. பனி சிறுத்தையின் வயிற்றுப் பகுதியில் இரண்டு சென்டி மீட்டர் அளவிற்கு ரோமங்கள் இருக்கும். இதனால் பனி சிறுத்தைக்கு குளிராது.
அதே போல் ரோமங்கள் இருப்பதால் மற்ற மிருகங்களாலும் பனிச்சிறுத்தையை எளிதாக கொல்ல முடியாது.
10. பனி சிறுத்தைகளால் இதுவரை மனிதர்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் நேர்ந்ததில்லை. இவை மனிதர்களிடம் ஆக்ரோஷம் காட்டியது இல்லை. இந்த வகை சிறுத்தைகள் தனது வேலைகளை பார்த்துக்கொண்டு மனிதனின் வழியில் வருவதில்லை. உணவு தேடும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் இவை மிகவும் அமைதியான ஒரு பிராணி.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment