Dinosaur facts in tamil | Top 10
டைனோசர் பற்றிய 10 தகவல்கள்
1. டைனோசர் என்னும் வார்த்தைக்கு 'பிக் லிசார்டு' அதாவது 'பெரிய பல்லிகள்' என்று பொருள் டைனோசர்கள் பல்லி போன்ற இனத்தை சேர்ந்தது என மனிதன் கருதுகிறான்.
2. நாம் நினைப்பது போல் இல்லாமல் டைனோசர்களின் முக்கால்வாசி இனங்கள் தாவர பட்சனியாகதான் இருந்துள்ளது.
எடுத்துக்காட்டுக்கு 10 டைனோசர்களை எடுத்துக் கொண்டால் அதில் இரண்டு மட்டுமே மாமிச பட்சினியாக இருக்கும்.
3. டைனோசர்கள் அளவில் பெரிதாக இருந்தாலும் கூட அவற்றால் வேகமாக ஓட முடியும்.
அதற்கு ஏற்றார்போல் அவற்றின் கால்கள் வலுவானதாக இருக்கும். பல டைனோசர்களால் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும்.
4. டைனோசர்களின் மிகப்பெரிய டைனோசர் இனம் "பிராக்கியோசாரஸ்".
இந்த இனமானது கிட்டத்தட்ட 80 டன் வரை வளரக்கூடியது. எடுத்துக்காட்டுக்கு 17 யானைகளை சேர்த்து எடை போட்டால் வரும் எடையே இந்த டைனோசரின் எடை ஆகும்.
5. உலகிலுள்ள அனைத்து பகுதிகளிலும் டைனோசர் இனம் வாழ்ந்து உள்ளது.
இதில் அண்டார்டிக்கா பகுதியும் அடங்கும்.
இது போன்று வேறு எந்த ஒரு மிருகயினமும் அனைத்து பகுதிகளிலும் வாழ்ந்தது இல்லை.
6. மனிதர்களால் டைனோசரின் ஆயுள் காலம் எவ்வளவு என்பதை இன்றளவும் கண்டுபிடிக்க இயலவில்லை.
எனினும் சில ஆராய்ச்சியாளர்கள் டைனோசர்கள் 200 வருடங்கள் வரை உயிர் வாழக்கூடும் என எண்ணுகின்றனர்.
7. டைனோசர்களின் மிகவும் பிரபலமான "வேலாசிராப்டர்" என்னும் டைனோசரின் பெயருக்கு அர்த்தம் "வேகமான திருடன்" என்பதாகும்.
இந்த இனமானது டைனோசர்களின் மிகப்பெரிய திருடனாக இருந்துள்ளது.
மற்ற டைனோசர்கள் உண்ணும் உணவை திருடி உண்டுள்ளது. அதேபோல் இவை மிகவும் வேகமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படும்.
8. டைனோசர் எந்த நிறத்தில் இருக்கும் என யாராலும் கூற முடியவில்லை.
இருந்த போதிலும் சில யூகமாக டைனோசர்கள் கருப்பு நிறம் மற்றும் பச்சை நிறங்களில் இருந்திருக்கலாம், அப்போதுதான் தாவரங்களுக்கு இடையில் தன்னை மறைத்துக் கொண்டு வாழ்ந்திருக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
9. டைனோசர்களில் நிறைய இனங்கள் முட்டை போடும் பழக்கத்தை கொண்டுள்ளன. இதில் அதிகமானது மிகவும் பெரிய இனமாக இருந்திருக்கலாம்.
அதேபோல் டைனோசர்கள் பறவைகளைப் போல முட்டையிட்டு அடைகாத்து குட்டி பொரிந்த பின்பு அதற்கு உணவளித்து வளர்த்துள்ளனர்.
10. டைனோசர்கள் மிகவும் பெரியது. இருந்தபோதிலும் இப்போது நம்முடன் வாழும் மற்றொரு விலங்கானது டைனோசர்களை விட பெரிதாக இருக்கிறது.
அது ப்ளூவேல் எனப்படும் நீலத்திமிங்கலம்.
உலகின் உயிருள்ள மிகப்பெரிய உயிரினம் நீலத்திமிங்கலம் ஆகும்.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment