Egypt Facts in Tamil | Top 10
எகிப்து பற்றிய 10 தகவல்கள்
1. எகிப்து நாடு தான் முதன்முதலில் காலண்டர் என்னும் கருவியை கண்டுபிடித்தது.
நாம் இப்போது பயன்படுத்தும் காலண்டர் ஆனது எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது. நம்மைப் போல் இல்லாமல் எகிப்து நாட்டினர் அவர்களின் நீர் ஆதாரமான 'நைல்' நதியின் வருகையை தெரிந்துகொள்ள காலண்டரை பயன்படுத்தியுள்ளனர்.
2. முதன்முதலில் ஆடைகளை கண்டுபிடித்து பயன்படுத்திய நாகரிகம் எகிப்து ஆகும்.
எகிப்து கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்பே ஆடைகளை உருவாக்கி உள்ளனர். ஆனால் இந்த ஆடைகளை அவர்கள் தங்களை வெயிலில் இருந்து பாதுகாக்க பயன்படுத்தியுள்ளனர்.
3. எகிப்தில் பிரமிடுகளைக் கட்டுவதற்கு என்று தனியாக வேலை ஆட்களை நியமித்து உள்ளனர். இவர்களை உயர்ந்த பதவியாக கருதியுள்ளனர். இவர்களுக்கு போதுமான அளவு சன்மானங்கள் கொடுத்துள்ளனர். அதேபோல் இவர்கள் இறந்த பின்பு இவர்கள் கட்டிய பிரமிடுகளுக்கு அருகிலேயே இவர்களை மரியாதையுடன் புதைத்துள்ளனர்.
4. எகிப்தில் உள்ள மக்கள் மூடநம்பிக்கையை பெரிதும் நம்புவார்கள். இருந்தபோதிலும் இந்த காலகட்டத்தில் அவர்கள் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். முகநூல் (பேஸ்புக்கில்) கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் எகிப்தியர்கள் இருக்கின்றனர். இதில் முக்கால்வாசி நபர்கள் செயல்பாட்டில் (ஆக்டிவாக) இருக்கின்றனர்.
5. எகிப்து நாட்டில் கடவுள் நம்பிக்கை மிகவும் அதிகம்.
அங்கு ஒவ்வொரு ஊருக்கும் தனியாக கடவுளை உருவாக்கி வழிபட்டு வருகின்றனர். இந்த கடவுள்கள் ஒரு மிருகமாக இருக்கலாம், ஒரு மரமாக இருக்கலாம் அல்லது உருவமற்ற ஒரு பொருளாக இருக்கலாம். இந்த காரணத்தினால் எகிப்தில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
6. உலகத்திலேயே மிகப்பெரிய அணையானது (Aswan Dam) எகிப்தில் தான் இருக்கிறது. இது உலகத்தின் மிகப்பெரிய நதியான நைல் நதியில் கட்டப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டின் முக்கிய நீர் ஆதாரமான நைல் நதியை அவர்கள் சிறப்பாக பயன்படுத்துகின்றனர்.
7. எகிப்து நாட்டில் அதிகப்படியாக அரபி மொழி தான் பேசப்படுகிறது. இந்த மொழி மட்டுமில்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளையும் இங்கு சரளமாக பேசுகின்றனர்.
இந்த மொழிகளுக்கு முன்னால் எகிப்தில் "காப்டிக்" என்ற மொழியானது மக்களிடையே இருந்துள்ளது.
இது எகிப்து நாட்டுக்கே உரித்தான ஒரு மொழியாகும்.
8. எகிப்து நாட்டில் எப்பொழுதும் தங்கள் ரத்தசொந்தத்தில் மட்டுமே திருமணம் செய்து வைப்பார்கள். இதிலும் அதிர்ச்சியாக அண்ணன்-தங்கைகுள் திருமணங்கள் நடந்துள்ளன.
இரத்த சொந்தம் அல்லாமல் பிற மக்களுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள்.
இதற்கு காரணம் தங்களின் ரத்தத்தின் புனிதமானது கெட்டுவிடும் என்பதாகும்.
9. எகிப்தில் பிணங்களை பதப்படுத்தும் முறையானது செயலில் உள்ளது. இதற்கு காரணம் எகிப்து மக்கள் இறந்த பின்பு தங்களின் உயிரானது நிரந்தரமாக இருக்கும் என நம்பி உள்ளனர். இதன் காரணமாக தங்களது உடல்களை பத்திரப் படுத்தி வைத்துள்ளனர். உடலை புதைக்கும் போது அதன் அருகிலேயே தங்களுக்குத் தேவையான அணிகலன்கள் , பொருட்கள் என அனைத்தையும் வைத்துப் புதைத்துள்ளனர்.
10. பொதுவாகவே எகிப்தில் அனைவரையும் பதப்படுத்தி புதைப்பது இல்லை.
ராஜாக்கள் மட்டுமே அப்படி புதைக்கப்படுகின்றனர். ராஜாவைத் தவிர சில முனிவர்களையும் சில பூனைகளையும் புதைத்துள்ளனர். மிகவும் அரிதாக ராஜாக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த வேலையாட்களையும் இப்படி பதப்படுத்தி ராஜாவின் அருகிலேயே புதைத்துள்ளனர்.
இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும்.
நன்றி.🙏
No comments:
Post a Comment