Sunday, February 21, 2021

King cobra facts in tamil | ராஜநாகம் பற்றிய தகவல்கள் | Tamil Facts

King cobra facts | Top 10

ராஜநாகம் பற்றிய 10 தகவல்கள் 


1. விஷமுள்ள பாம்புகளில் மிகப் பெரிய பாம்பினம் ராஜநாகம் ஆகும். ஒரு ராஜநாகம் ஆனது கிட்டத்தட்ட 10 முதல் 13 அடி வரை வளரக்கூடியது. 
அதாவது மனிதர்களை விட இரண்டு மடங்கு அதற்கும் மேல் அதிகம்.

2. ராஜநாகம் ஆனது அச்சுறுத்தப்பட்டால் தனது உடம்பினை பரப்பி பெரியதாக காட்டும். 
கிட்டத்தட்ட ஆறு அடி வரை எழுந்து படமெடுக்கும். 
இதைவிட சிறப்பம்சம் ராஜநாகங்கள் நாய்களைப் போல உறுமும். 
இவை காற்றினை வேகமாக வெளியேற்றும் போது இந்த ஒலியை எழுப்புகின்றன.

3. ராஜநாகத்தின் விஷமானது மற்ற பாம்புகளை போன்று சாதாரணமானதுதான். இருந்தபோதிலும் இந்தப் பாம்புகள் விஷத்தை செலுத்தும் அளவில்தான் இவை மோசமான உயிர் கொல்லியாக மாறுகின்றன. 
ராஜநாகம் ஒருமுறை கடிக்கும் பொழுது ஒரு சிறிய கரண்டி அளவிலான விஷத்தினை உடம்பினுள் செலுத்துகிறது. இதன் மூலம் 20 மனிதர்களை கொல்ல முடியும். ஒரு வளர்ந்த யானையை அரை மணி நேரத்தில் கொல்ல முடியும்.

4. ராஜ நாகத்திற்கு பிடித்த உணவு மற்ற பாம்புகள். 
அதிலும் தன் இனமான மற்ற ராஐநாகங்களை இந்தப் பாம்புகள் சாப்பிடும். 
சில பாம்புகள் மலைப்பாம்புகளை கூட கொன்றுள்ளன. 
ஆனால் பெரிய அளவில் இருப்பதால் மலைப்பாம்புகளை விழுங்க முடியாமல் பாதியிலேயே கக்கி விடும்.

5. ஆண் ராஜநாகங்கள் மற்ற ஆண்களுடன் சண்டையிடும். நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் குத்துச்சண்டை போல் இவைகளும் சண்டையிடும். சண்டையில் வெற்றி பெறும் ராஜநாகம்தான் இனப்பெருக்கம் செய்யும். 
சண்டையில் இவை கடைப்பிடிக்கும் ஒரு விதிமுறை விஷத்தினை பயன்படுத்தக் கூடாது என்பதாகும்.

6. பெண் ராஜநாகங்கள் கூடு கட்டி முட்டையிடும். 
இந்த கூட்டை கட்ட அதற்கு நான்கு நாட்கள் தேவைப்படும். 
கூடுகளில் கிட்டத்தட்ட 20 முதல் 30 முட்டைகள் வரை இடுகின்றன. முட்டை பொரிக்கும் வரை நான்கு மாதங்கள் தாயானது கூட்டின் அருகிலேயே இருக்கும். 
ஆனால் முட்டை பொரியும் தருணத்தில் கூட்டினை விட்டு சென்றுவிடும்.

7. ராஜ நாகங்களின் ஆயுள்காலம் 17 ஆண்டுகள். 
ஆனால் மனிதனின் பராமரிப்பில் வாழ்ந்தால் இவை 22 வருடங்கள் வரை உயிர் வாழும். 
சில விலங்குகள் சரணாலயத்தில் இதை விட அதிகமாக சில பாம்புகள் உயிர்வாழ்ந்து உள்ளன.

8. ராஜ நாகங்கள் சிறப்பாக மரம் ஏறும் திறன் பெற்றுள்ளன. அதேபோல் கரடுமுரடான மலைப் பகுதியிலும் இந்த பாம்பினால் ஏறமுடியும். 
இதுமட்டுமல்லாமல் ராஜநாகங்களால் அருமையாக நீச்சல் அடிக்க முடியும். 
வேகமான தண்ணீரிலும் இவை எளிதாக நீச்சலடித்து கடந்துவிடும்.

9. சிறிய ராஜ நாகங்களை முதலைகள், ராணுவ எறும்புகள் போன்றவை சுலபமாக கொன்று விடும்.
ஆனால் பெரிய ராஐ நாகங்களை பெரிய கழுகு வகைகள் மற்றும் கீரிகள் மட்டுமே கொல்ல முடியும்.

10. ராஜ நாகங்கள் பொதுவாக மனிதர்களை கடிப்பது இல்லை. ராஜ நாகங்கள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளை தவிர்த்து விடும். 
இந்தப் பாம்புகள் கடித்து இறந்தவர்கள் அதிகப்படியாக பாம்புகளை கையாளும் நிபுணர்களாகவே இருந்துள்ளனர்.

இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 
நன்றி.🙏

No comments:

Post a Comment