Tuesday, March 2, 2021

Titanic Facts in tamil | டைட்டானிக் தகவல்கள் | Tamil Facts

Titanic Facts In Tamil | Top 10

டைட்டானிக் பற்றிய 10 தகவல்கள்



1. டைட்டானிக் விபத்தில் சிக்கியதற்கு முக்கிய காரணம் அதில் "பைனாகுலர்" இல்லை. டைட்டானிக் கப்பலில் "பைனாகுலர் அறைக்கான" சாவி யாரிடமும் இல்லை. 
அதன்பிறகு 2010'ல் அந்த சாவி ஏலம் விடப்பட்டு மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டது.

2. டைட்டானிக் ஒரு நாளைக்கு 600 டன் நிலக்கரியை பயன்படுத்தி செயல்பட்டுள்ளது.
இதனை தொழிலாளர்கள் கைகளிலேயே எடுத்து கலன்களில் போட்டுள்ளனர். இதற்காகவே கிட்டத்தட்ட 176 தொழிலாளர்கள் கப்பலின் அடிப்பகுதியில் நெருப்பில் வேலை பார்த்துள்ளனர்.

3. டைட்டானிக்கில் மொத்தம் 20 பாதுகாப்பு படகுகள் மட்டுமே இருந்துள்ளது. இதனால் 1000 பேர் மட்டுமே தப்பிக்க முடிந்தது. ஆனால் டைட்டானிக்கில்  பயணம் செய்தவர்கள் மொத்தம் 3000 பேர். மூன்றில் ஒரு மடங்கு மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.

4. டைட்டானிக்கில் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் இருந்துள்ளன. டைட்டானிக்கில் கிட்டத்தட்ட 9 நாய்கள் இருந்துள்ளன. அவற்றில் 2 மட்டுமே உயிருடன் காப்பாற்ற பட்டுள்ளது.

5. டைட்டானிக் பனிப்பாறை பார்த்ததற்கும் விபத்து நடந்ததிற்கும் இதையே கிட்டத்தட்ட 37 நொடிகள் மட்டுமே இருந்துள்ளது. இந்தக் குறுகிய நேரத்திற்குள் கப்பலை திருப்ப முடியாமல் விபத்து நடந்துள்ளது.

6. டைட்டானிக்கில் மொத்தம் நான்கு புகைபோக்கிகள் இருந்துள்ளன. ஆனால் அவற்றில் மூன்று மட்டுமே செயல்பட்டுள்ளது மற்றொன்று காற்று உள்ளே  வெளியே நுழைய பயன்படுத்தப்பட்டுள்ளது.

7. டைட்டானிக்கில் இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாக கண்டு பிடிக்கப் படவில்லை. காரணம் டைட்டானிக்கில் பொய்யான பயணச் சீட்டுடன் நிறைய பேர் பயணம் செய்துள்ளனர்.

8. டைட்டானிக் முழுகும் வரை அதில் மின்சாரம் இருந்துள்ளது. காரணம் வேலையாட்கள் இறுதி வரை தங்களின் பணிகளை செய்துள்ளனர். இல்லை என்றால் மின்சாரம் இல்லாமல் மேலும் நிறைய மனிதர்கள் இறக்க வாய்ப்புள்ளது..

9. படத்தில் காட்டியது போல நிஜத்திலும் டைட்டானிக்கில் உள்ள இசைக் கலைஞர்கள் கப்பல் மூழ்கும் வரை இசைகளை இசைத்து பயணிகளை அமைதியாக இருக்க வழி செய்துள்ளனர்.

10. 1898' இல் அதாவது டைட்டானிக் மூழ்கியதற்கு 10 வருடங்களுக்கு முன்பே "ரேத் ஆப் டைட்டன்" என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி புத்தகமும் வெளியிட்டு உள்ளனர். இதில் டைட்டானிக்கை போன்ற மிகப்பெரிய கப்பல் பனிக்கட்டியில் மோதி அழிந்து போனது போல் கதை அமைக்கப்பட்டு உள்ளது. நிஜக் கதையை முன்கூட்டியே இந்த ஆசிரியர் எழுதியுள்ளார்.


இந்த பதிவு பிடித்திருந்தால் 👍....
இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பெற விரும்பினால்,
உங்களது EMAIL ADDRESS 'ஐ நமது பக்கத்தில் (கீழே) பதிவு செய்யவும். 
நன்றி.🙏

No comments:

Post a Comment