மனிதர்களைக் கொல்லும் மிருகங்கள்.
Animal That kill Humans
மிருகங்கள் எப்பொழுது ஆக்ரோஷமாக மாறும் என யாருக்கும் தெரியாது அந்த வரிசையில் உலகில் அதிக படியான மனிதர்களை கொல்லும் விலங்குகளின் பட்டியலை தலைகீழாக பார்க்கலாம்.
10. சுறா :
சுறா மீன்கள் வருடத்திற்கு 140 மனிதர்களை தாக்குகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் இறப்பவர்களின் எண்ணிக்கை நான்கு மட்டுமே. அதுவும் இவர்கள் ரத்தத்தை இழந்துதான் இறக்கிறார்கள். பொதுவாகவே மனிதர்களின் மாமிசத்தை சுறாகள் சாப்பிடுவது இல்லை.
9. சிறுத்தை புலி :
சிறுத்தை புலிகள் வருடத்திற்கு 15 பேரை கொள்கின்றன.அதிலும் குறிப்பாக இந்தியாவில் அதிகப்படியான மக்கள் சிறுத்தை புலிகள் கொல்லப்படுகின்றனர். சிறுத்தை புலிகள் தாக்கப்பட்டாலும் மிகவும் ஆக்ரோஷமாக எதிர்த்து தாக்கக்கூடியது.இவை மற்ற மிருகங்களைப் போல தப்பித்து ஓடுவதற்கு முயல்வது இல்லை.
8. குதிரை :
குதிரைகள் மனிதர்களை தாக்குவது இல்லை. ஆனால் குதிரைகளால் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன. கிட்டத்தட்ட வருடத்தில் 20 பேர் குதிரை பயணத்தின் போதே இறக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக குதிரை பந்தயத்தின் போது தான் அதிகப்படியான மனிதர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.
7. மாடு :
மாடுகள் மிகவும் அமைதியான மிருகம்.இருப்பினும் இவற்றிற்கு எதிர்பாராதவிதமாக கோபம் வரும். அந்த நேரங்களில் இவை தனது கூர்மையான கொம்புகளின் மூலம் தாக்கும். இதனால் வருடத்திற்கு 22 பேர் கொல்லப்படுகின்றனர்.
6. எறும்பு :
எறும்புகள் வருடத்திற்கு கிட்டத்தட்ட 30 பேரை கொள்கிறது. அதிகப்படியான வகைகள் இருக்கின்றன.ஆனால் இவற்றில் முக்கால்வாசி எறும்புகள் நமது உடலில் ரசாயனங்களை கடிக்கும்போது செலுத்துகின்றன.
இது மனித உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் மனிதர்கள் இறக்கின்றனர். அதிலும் அதிகமான எண்ணிக்கையில் எறும்புகள் கடித்தால் விரைவாக மரணம் நிகழும்.
5. தேன் பூச்சி :
தேன் பூச்சிகள் தனது கூடுகள் சீண்டபட்டால் குழுவாக சேர்ந்து தாக்கக்கூடியது.இவற்றின் கொடுக்கு அதிகப்படியான விஷத் தன்மை நிறைந்து இருக்கும். இப்படி அதிகப்படியான பூச்சிகள் நம்மை தாக்கும் பொழுது மரணம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 63 பேர் தேன்பூச்சிகள் கடிப்பதால் இறக்கின்றனர்.
4. சிங்கம் :
சிங்கங்கள் வருடத்திற்கு கிட்டத்தட்ட 70 பேரை கொல்கின்றன.
அதிலும் குறிப்பாக மரணங்கள் ஆப்பிரிக்காவில் தான் அதிகமாக ஏற்படுகின்றன. பொதுவாக சிங்கங்கள் மனிதர்களை உணவாக சாப்பிடுவது இல்லை. ஆனால் மனிதர்கள் சிங்கத்திற்கு எளிதான குறியாக இருப்பதால் இது நிகழ்கிறது.
3. நாய்கள் :
வீட்டில் வளர்க்கும் நாய்களால் நிறைய மனிதர்கள் இறக்கின்றனர்.
கிட்டத்தட்ட வருடத்திற்கு 100 பேர் மனித நாய்கள் கடித்து இறக்கின்றனர். அதிலும் குறிப்பாக "ரபீஸ்" என்னும் நோய் தொற்று ஏற்படுவதால்தான் இந்த மரணங்கள் நிகழ்கின்றன. எனவே வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய்களிடமும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
2. மான் :
மான்கள் மனிதர்களை அதிகப்படியாக தாக்குகின்றன. அதிலும் குறிப்பாக கொம்பு வைத்த கிளைமானகள் அதிகப்படியாக மனிதர்களை குறிவைத்து தாக்கும். மனிதர்கள் அதிகப்படியாக சாலை ஓரங்களில் நிற்பவர்கள் தான் தாக்கப்படுகின்றன.
1. ஜெல்லி மீன் :
ஜெல்லி மீன்கள்தான் உலகில் அதிகப்படியான மக்களை கொல்கிறது. கிட்டத்தட்ட வருடத்திற்கு 825 மனிதர்களை ஜெல்லி மீன்கள் கொல்லுகின்றன. அதிலும் இவற்றின் விஷம் மிகவும் கொடுமையானது. இதனால் ஏற்படும் வலியை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது.